சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்றுநடும் போராட்டம்


சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்றுநடும்  போராட்டம்
x

கோட்டூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்றுநடும் போராட்டம் நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்;

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே 69 ரெங்கநாதபுரம் வடக்கு தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு சுமார் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பெய்துவரும் தொடர் மழையால் அங்குள்ள சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த குழிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், குழிகளை மூட வேண்டும் என கிராமமக்கள் கலெக்டர்,. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திரண்டு சாலையில் தேங்கி கிடந்த மழை நீர் சேற்றில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேறும், சகதியுமாக உள்ள இந்த சாலையில் வயலில் நாற்றுகளை நடுவது போல பெண்கள் நாற்றுகளை நட்டனா்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதி சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story