சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் வக்கீல்கள் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி
நெல்லை வக்கீல் சங்க செயலாளர் காமராஜ் தலைமையில் வக்கீல்கள் வினோத்குமார், ஆரோக்கியசாமி, ரஞ்சித், சபரி, மதார் மைதீன் உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை -நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே வேளாண் பொறியியல் சங்க வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை, ஓட்டல் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இதன் அருகில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள நடை பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர். எனவே அங்குள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி, பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத கழிவுநீர் தொட்டியை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story