சாலை மேம்படுத்தும் பணி
சாலை மேம்படுத்தும் பணி
வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் ஆதனூரில் 2 கிலோ மீட்டர் தூரமும், கோடியக்கரை வேதாரண்யம் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரமும் சாலையை மேம்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் மதன், சாலை ஆய்வாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சை முதல் கோடியக்கரை வரை இத்திட்டத்தில் சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வேதாரண்யம் உட்கோட்டத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.2 கோடியே 30 லட்சத்தில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. மற்ற பணிகள் விரைந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.