சாலை பராமரிப்பு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


சாலை பராமரிப்பு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x

சாலை பராமரிப்பு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு பணி கொடைக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும், நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, அவற்றின் அகலம், நீளத்திற்கு ஏற்ப போக்குவரத்தின் அடிப்படையில் 5 கிலோ மீட்டருக்கு 2 பேர் என்ற முறையில் பணியாளர்களுக்கு வேலை வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும்,

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8 ஆயிரம் சாலை பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story