குடிநீர் தெரு குழாய் அமைக்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம் நகராட்சி 4-வது வார்டில்குடிநீர் தெரு குழாய் அமைக்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் இணைப்பு
தாராபுரம் நகராட்சி பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் பெரும்பாலும் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சில தெருக்களில் இலவசமாக தெரு குடிநீர் குழாய் கேட்டு வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் பணியாளர் சம்பளம் மற்றும் துப்புறவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வருவாயை பெருக்கும் நோக்கில் தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
அதுபோல தெரு குழாய்களிலும் தண்ணீர் வழங்க கோரி நேற்று காலையில் காமராஜபுரம் 4-வது வார்டு பகுதியில் திடீரென 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வடதாரை பிரிவு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது நகராட்சி நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சமாதானம் அடைந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.