குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர்
அவினாசி ஒன்றியம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தடையின்றி குடிநீர் கிடைக்க ஆவன செய்வதாக அவர் பொதுமக்களிடம் உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் கூறுகையில் "மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்த முறையாக குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகம் தாமதமானது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Next Story