திருநங்கைகள் சாலை மறியல்


திருநங்கைகள் சாலை மறியல்
x
திருப்பூர்


திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் கணவன் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகார் கொடுக்க பெண்ணுக்கு ஆதரவாக 2 திருநங்கைகள் வந்தனர். அவர்களை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பாக திருநங்கைகள் சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story