சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனியில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேனி
தேனி போக்குவரத்து போலீசார் சார்பில், அரண்மனைப்புதூர் விலக்கில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அவற்றில் இருந்த விழிப்புணர்வு வாசகங்களை சத்தமாக வாசிக்க வைத்தனர். பின்னர், போலீசாரும், பொதுமக்களும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் போக்குவரத்து போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story