சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
x

புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் மற்றும் சீர்காழி அரிமா சங்கம் ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வைத்தார்.மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் விசுவநாதன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் சாலையில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றி செல்ல வேண்டும். செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். செஞ்சுலுவைச் சங்க திட்ட அலுவலர் தாமரைச்செல்வி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், சீர்காழி அரிமா சங்க தலைவர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத் நன்றி கூறினார்.


Next Story