சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
திருப்பனந்தாள் அருகே மற்றும் துகிலி நடுநிலைப்பள்ளி, திருமங்கலக்குடி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள் குழு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு பிரசார பஸ்சை கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.சண்முகவேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை மேலாளர் ராஜேஷ், உதவி கிளை மேலாளர் அசோக்ராஜ், சட்டத் தன்னார்வலர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துகொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டனர். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், துகிலி பள்ளி தலைமை ஆசிரியர் முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.