சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து
x

குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை மாணவர்கள் பார்த்தனர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தடுப்பது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து நேற்று குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பேருந்தில் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள், வளைவு பகுதியில் ஏற்படும் விபத்துக்கள், பஸ் படிக்கட்டில் தொங்கிச் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்கள், அதிகளவு உயரத்தில் பாரம் ஏற்றிச் சென்றால் ஏற்படும் விபத்துக்கள், மோட்டார் சைக்கிளில் அதிக நபர்கள் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள், ஹெல்மெட் அணிவதின் அவசியம், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தி செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் விழிப்புணர்வுபட கண்காட்சி மற்றும் விபத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை கண்டு களித்தனர்.

விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியாத்தம் கிளை மேலாளர் விநாயகம், பணிமனை ஓட்டுனர் சங்க செயலாளர் பரந்தாமன், ஓட்டுனர் பயிற்றுனர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


Next Story