சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகேசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் உயிர்க்கவசம், வளைவுகளில் முந்தாதீர், மிதவேகம் மிக நன்று உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் வாகன ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஐரின் ஜெயராணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story