குடிநீர் வழங்கக்கோரி மறியல்
அய்யம்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி சாைல மறியல் நடந்தது.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பட்டித் தோப்பு பகுதியில் வயலுக்கு செல்லும் பாதையை மீட்டு தரக்கோரி விவசாயிகள் சிலர் திருவையாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன் தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந் நிலையில் இப்பகுதியில் இருந்த பசுபதி கோவில் ஊராட்சிக்கு சொந்தமான நீரேற்றும் மின் மோட்டார் அறை நேற்று அகற்றப்பட்டது. இதனால் இப்பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே மாற்று ஏற்பாடு செய்து உடனே குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறிதது தகவர் அறிந்த அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரெஜிலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் முகமது முபாரக்அலி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.