பாளையங்கால்வாய் கரையில் ரூ.1½ கோடியில் சாலை விரிவாக்க பணி


பாளையங்கால்வாய் கரையில் ரூ.1½ கோடியில் சாலை விரிவாக்க பணி
x

பாளையங்கால்வாய் கரையில் ரூ.1½ கோடியில் சாலை விரிவாக்க பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி முக்கில் இருந்து மேலநத்தம் பாலம் வரையிலும் பாளையங்கால்வாய் கரையில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார்.

மேலும் நெல்லை மாநகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, வடகிழக்கு பருவமழையின்போது தண்ணீர் தேங்காமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பகுதி, மனக்காவலம்பிள்ளை நகர், அன்புநகர், பெருமாள்புரம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடக்கூடிய கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளையும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story