சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம்
குன்னம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் அம்சராஜ், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் இறந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீத ஆபத்து படி மற்றும் நிரந்தர பயணப்படி, சீருடை சலவை படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.