சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு போராட்டம்


சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு போராட்டம்
x

சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நேற்று முக்காடு போட்டு மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மகேந்திரன் விளக்கி பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் துண்டால் முக்காடு போட்டு கொண்டு, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை தமிழக அரசு பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 என நிர்ணயம் செய்து ஊதிய அந்தஸ்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story