ரூ.1.63 கோடியில் மங்களம் அருவிக்கு சாலைபணிகள்


ரூ.1.63 கோடியில் மங்களம் அருவிக்கு சாலைபணிகள்
x

உப்பிலியபுரம் அருகே உள்ள மங்கலம் அருவிக்கு ரூ.1.63 கோடியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி

உப்பிலியபுரம், செப்.11-

உப்பிலியபுரம் அருகே உள்ள மங்கலம் அருவிக்கு ரூ.1.63 கோடியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

மங்களம் அருவி

உப்பிலியபுரத்தை அடுத்து உள்ளது கல்வராயன்மலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை. இவைகள் திருச்சி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய மலைப்பிரதேசமாகும். சேலம் மாவட்ட பகுதியில் அமைந்துள்ள மங்களம் அருவி, திருச்சி மாவட்ட வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது. பச்சைமலை, டாப்செங்காட்டுப்பட்டியிலிருந்து வெங்கமுடி, சின்ன பக்களம், பெரிய பக்களம், ஓடக்காடுபுதூர், சின்ன மங்களம், பெரியமங்களம் வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மங்களம் அருவி.

சின்னமங்களத்திலிருந்து மங்களம் ஏரிக்கு தனியார் பாதை வழியாக சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். மேலும் அந்த. பாதை கரடுமுரடாகவும், மண்பாதையாகவும் இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே புதிய பாதை அமைத்துதரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கு சாலை அமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரிய மங்களத்திலிருந்து, மங்களம் அருவிக்கு ஆயிரத்து 100 மீட்டர் தொலைவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 5 மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.


Next Story