எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
தேவகோட்டை,
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை கண்டித்து தேவகோட்டை ஒத்தக்கடையில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story