ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நளினி உள்பட 6 பேர் விடுதலையை கண்டித்து ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலையை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் மகாதேவன், பொதுச்செயலாளர் சுரேஷ், தியாகராஜன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் முத்தப்பா, செல்வம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story