சாலை மறியல்


சாலை மறியல்
x

விருதுநகரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் நான்கு வழி சாலையில் வடமலைக்குறிச்சி ரோடு சந்திப்பில் அணுகு சாலை இல்லாததால் வாகன விபத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் அணுகு சாலை அமைக்க கோரி கலைஞர் நகர் பகுதி மக்கள் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் கோரியும் நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.



Next Story