சாலைமறியல்
சாலைமறியல் ேபாராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்.
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள 7 தெருக்களில் வசிக்கும் ஒரே பிரிவினர் இணைந்து சித்திரை முதல் நாள் வெண்குடை திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழா குறித்த சமாதான கூட்டம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதில் அம்மன் பொட்டல் தெரு நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லாததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழைய பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Related Tags :
Next Story