நாகூர் வெட்டாற்று பாலத்தில் சாலை மறியல்


நாகூர் வெட்டாற்று பாலத்தில் சாலை மறியல்
x

நாகூர் வெட்டாற்று பாலத்தில் சாலை மறியல் பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்

நாகப்பட்டினம்

நாகூர்:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஏராளமான உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு மீது எழுந்த சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அந்த அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் நேற்று மதியம் மாவட்டத் தலைவர் ரபீக் தலைமையில் 30 பெண்கள் உள்பட 42 பேர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு ெதரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்ட 42 பேரை கைது செய்தனர்.


Next Story