பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலைமறியல்


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலைமறியல்
x

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு பிறகு, தேசிய தலைவர் சலாவுதீன் உள்ளிட்ட தேசிய பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரியும் அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் பள்ளப்பட்டி நகர தலைவர் யாசர் அரபாத் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 12 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


Next Story