அடிதடி வழக்கில் வாலிபரை கைது செய்யக் கோரி சாலைமறியல்
ஜோலார்பேட்டை அருகே அடிதடி வழக்கில் வாலிபரை கைது செய்யக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை அருகே அடிதடி வழக்கில் வாலிபரை கைது செய்யக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அடிதடி
ஜோலார்பேட்டையை அடுத்த மேல்அச்சமங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் பில்லா (வயது 40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஜய் (25) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பில்லாவை அஜய் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று காலை மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடயே தகராறு ஏற்பட்டு பில்லாவை சரமாரியாக தாக்கிய தாக்கியுள்ளார்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பில்லாவின் உறவினர்கள் சுமார் 30 பேர் அஜயை கைது செய்யக்கோரி பாச்சல் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் சாமுடி வட்டம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.