சாலைகளை என்.சி.சி. மாணவர்கள் தூய்மை செய்தனர்
தூய்மை இந்தியா திட்டத்தில் சாலைகளை என்.சி.சி. மாணவர்கள் தூய்மை செய்தனர்.
காட்பாடி 10-வது பட்டாலியனை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் சாலைகளை தூய்மை செய்யும் பணியும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தையும் நடத்தினர். நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கி தூய்மை பணியையும், விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார்.
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி உள்பட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 230 என்.சி.சி. மாணவ, மாணவிகள் காந்திநகரில் உள்ள சாலைகளை தூய்மை செய்தனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.
இதில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி முதன்மை அலுவலர் க.ராஜா, சுபேதார் மேஜர் பி.கே.சாஹூ, தூய்மை இந்தியா திட்ட வேலூர் மண்டல அலுவலர் வைஷ்ணவி, மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவில்தார் மேஜர் வீரமணி நன்றி கூறினார்.