2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்


2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்
x

திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூரில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூரில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பலத்த மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்லச்செல்ல வலுத்தது. மாலை 6 மணி வரை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடைநீரும் கலந்து ஓடியது.

திருப்பத்தூர் பெரியார் நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி பகுதியில் தெருக்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. துர்நாற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகனங்கள் சிரமத்துடன் தத்தளித்தவாறு சென்றன.

மழைக்காலங்களில் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது எனவே நகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாட்டறம்பள்ளி

இதேபோல் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாட்டறம்பள்ளி மற்றும் ஏலகிரி மலையில் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சந்தைகோடியூர் பகுதியில் பலத்த மழை மாலை 4 மணி முதல் தொடர்ந்து 7 மணி நேரம் வரை தொடர்ந்து பெய்தது இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது. நாட்டறம்பள்ளி சாமுண்டீசுவரி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்த நிலையில் பக்தர்கள் மழையில் நனைந்து சென்றனர்.

தாமலேரிமுத்தூர் மற்றும் மூக்கனூர் பகுதியில் கோயில் திருவிழாவில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. பலத்த மழையால் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான நேதாஜி நகர், நியூடவுன் பெரியபேட்டை, மற்றும் கொடையாஞ்சி அம்பலூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, ஆமங்பூர், உதயேந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்தமழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story