சாலையோர வியாபாரிகள் திடீர் மறியல்
செங்கத்தில் சாலையோர வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கத்தில் சாலையோர வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மூலம் உத்தரவிடப்பட்டு இருந்தது. சிலர் கடைகளை அவர்களாகவே அகற்றிக்கொண்டனர். அகற்றப்படாத கடைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள குளத்தை ஒட்டி வியாபாரிகள் சிலர் கடை அமைக்க முயன்றனர். இதை அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்குசென்று கடை அமைப்பதை தடுத்து நிறுத்தி, மரக்கன்றுகள் நடுவதற்காக அளவீடு செய்தனர்.
இதனை கண்டித்து சாலையோர கடை வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.