சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x

சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தில் வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் 2-ம் தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. எனவே இதனை பயன்படுத்தி சாலையோர வியாபாரிகள் கடன்பெற்று பயன் அடையலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 9942786122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story