செஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி


செஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட   வாலிபருக்கு தர்ம அடி
x

செஞ்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனா்.

விழுப்புரம்

செஞ்சி,

பண்ருட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 25). இவர் செஞ்சி பொன்பத்தி மேல்எடையாளம் பகுதியில் பொதுமக்ளிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை என்.ஆர் பேட்டையில் ஆசைதம்பி என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தீவன கடையில் கத்தியை காட்டி மிரட்டி திருடி உள்ளார்.

தொடர்ந்து, மேல்எடையாளத்தில் காசி என்கிற விவசாயியிடம் கத்தியை காட்டி செல்போனை பறிக்க முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அய்யனாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story