முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் கொள்ளை
கொரடாச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொரடாச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவிலில் சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெள்ளக்குடியை சேர்ந்தவர் கைலாசம். இவர் முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கைலாசத்தின் மகன் குணசீலன் கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வருகிறார். கைலாசம் தனது பேரன் சர்வேஷை விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா ஆகியோருடன் நேற்று சென்றார்.
முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் கொள்ளை
சாமி தரிசனம் முடித்துவிட்டு மதியம் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் உள்ள ஒரு மர பீரோ மற்றும் 2 ஸ்டீல் பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் பீரோக்களில் இருந்்த 14 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.