ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு


ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
x

ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சீதாநகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.பின்னர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்ததுதெரியவந்தது.

வெள்ளிப்பொருட்கள்-மோட்டார்சைக்கிள்

மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் 600 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து யுவராஜ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story