தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரம்
தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூட்டுறவு வங்கி மேலாளர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). குண்டடம் பகுதியில் உள்ள ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியும் நிலவள வங்கியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து செல்லமுத்து முதலில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. துணிகள் சிதறிக்கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க சங்கிலி, ½ கிலோ வெள்ளிப்ெபாருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து தாராபுரம் போலீசில் செல்லமுத்து புகார் செய்தார். அதன் பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்து விசாரணை செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மர்ம ஆசாமிகள் கைவரிசை
தம்பதி இருவரும் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட ஆசாமிகள், அவருடைய வீட்டின் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சதை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.