பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 16½ பவுன் நகைகள்-பணம் கொள்ளை


பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 16½ பவுன் நகைகள்-பணம் கொள்ளை
x

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 16½ பவுன் நகைகள்-பணம் கொள்ளை

தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 16½ பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெட்டிக்கடை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேகா(45). நேற்றுமுன்தினம் இரவு ரேகா தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளியூர் சென்றுவிட்டார். சவுந்தரராஜன் கடையில் இருந்துள்ளார்.

கத்தியை காட்டி மிரட்டி

சம்பவத்தன்று இவர்களது மகள் சோனா (19) வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு இருந்த சோனாவின் வாயை துணியால் மூடி அவரது கழுத்தில் கத்தியை காட்டி பீரோவின் சாவியை கேட்டனர். ஆனால் அவர் பீரோ சாவி இருப்பது தெரியாது என்று கூறியுள்ளார்.

16½ பவுன் நகைகள் கொள்ளை

இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பீரோவை உடைத்து அதில் இருந்த 16½ பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.9,500 ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் சோனா கழுத்தில் கிடந்த சங்கிலியையும் பறித்து கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு வீட்டின் பின்புறமாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சவுந்தரராஜன் அதிராம்பட்டினம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story