பறக்கை அருகே கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
பறக்கை அருகே கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்,
பறக்கை அருகே கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
உண்டியல் பணம்
பறக்கை அருகே சித்திரை திருமக ராஜபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை என பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் இதுபற்றி ஊர் தலைவர் வெங்கடேசன் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கோவில் உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நெல்லை மாவட்டம் இருக்கன்துறையை அடுத்த வண்ணார்குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற குமார் (வயது 47) என்பவர் திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.