அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை
விருத்தாசலம் அருகே அம்மன் கோவிலில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், அதேபகுதியை சேர்ந்த அருள் என்பவர் அர்ச்சகராக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை அருள் பூட்டிச் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் நகை, 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமாராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.