பழனியில் கடும் பனிமூட்டதால் ரோப்கார் சேவை பாதிப்பு


பழனியில் கடும் பனிமூட்டதால் ரோப்கார் சேவை பாதிப்பு
x

பழனியில் கடும் பனிமூட்டதால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய 2 சேவைகள் உள்ளன. இதில் கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் சேவை நடைபெறுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து இது இயங்குவதால் பலமாக காற்று வீசினால் அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. மேலும் பழனி மலைக்கோவில் பகுதியில் பனிமூட்டமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார் சேவையை தொடங்குவதில் நேற்று சிக்கல் ஏற்பட்டது. இதனால் வழக்கம்போல் 7 மணிக்கு தொடங்க வேண்டிய சேவை நிறுத்தப்பட்டது.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலே தெரியாதபடி பனிமூட்டம் இருந்ததால் ரோப் கார் சேவையை இயக்க தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு பனிமூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக விலகியபிறகு, 8 மணிக்கு மேல் ேராப் கார் சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். பழனியில் ரோப்கார் சேவை 1 மணி நேர பாதிப்பால் அங்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story