பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
x

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் சிறுக்கனாவயல் பகுதியை சேர்ந்தவர் வனிதா (வயது 38). இவரது கணவர் கண்ணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். வனிதா தன் குழந்தைகள் படிப்பிற்காக கோட்டையூரில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுக்கனாவயலில் உள்ள தனது வீட்டை பார்த்து வருவதற் காக இருசக்கர வாகனத்தில் கோட்டையூரில் இருந்து புறப்பட்டு சென்றார். அண்டக்குடி விலக்கு அருகே செல்லும் போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து வனிதா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். அப்போது வனிதா அவனோடு போராடியதில் நகை அறுந்து திருடன் 4 பவுன் நகையுடன் தப்பி சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story