'நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியம்' - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உரை


நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியம் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உரை
x

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக உறுதுணையாக செயல்படுவேன் என்று நீதிபதி கங்காபூர்வாலா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின் நீதிபதி கங்காபூர்வாலா முதன் முறையாக மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து உரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, 'தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட குடும்பத்திற்கு தலைவனாக உறுதுணையாக செயல்படுவேன்' என்றும், தங்கள் கோரிக்கைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்றும் குறிப்பிட்டார். மேலும் நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.





Next Story