எவ்ளோ லவ் பண்ற...சின்சியரா லவ் பண்றியா.." 'ரவுடி' பேபியுடன் உளவுத்துறை போலீசார் பேசிய ரொமான்டிக் ஆடியோ
கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் உளவுத்துறையில் பணியாற்றும் காவலர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் உளவுத்துறையில் பணியாற்றும் காவலர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்த சதீஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், குன்றத்தூரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி எஸ்தர் என்கிற யோகேஸ்வரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருடன் சோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஐ.எஸ். உளவுப் பிரிவைச் சேர்ந்த காவலர் மாதவன் என்பவர், செல்போனில் ஆபாசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன் பேசுவதும், மாதவனுடன் எஸ்தர் கொஞ்சி பேசுவதும் இடம்பெற்றுள்ளது.