கூரைவீடு, மருந்து கடை தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


கூரைவீடு, மருந்து கடை தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x

கூத்தாநல்லூர் அருகே கூரை வீடு, மருந்து கடை தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே கூரை வீடு, மருந்து கடை தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

கூரை வீடு தீப்பிடித்தது

கூத்தாநல்லூர் அருகே உள்ள திருராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது45).இவர் நேற்று காலை, தனது கூரை வீட்டை பூட்டிவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

மருந்து கடை

இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், மெத்தை மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.

இதேபோல கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி மரக்கடையில் உள்ள மருந்து கடை தீப்பிடிடித்து எரிந்தது. தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருந்து கடையில் இருந்து மருந்துகள் உள்படஎரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ, 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story