கூரை வீடு எரிந்து சேதம்
சிக்கலில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.
சிக்கல்:
சிக்கல் ஊராட்சி ெரயில்வே நிலைய ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி (வயது 65). இவர் நேற்று மாலை தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை மேய்ப்பதற்காக வெளியே சென்று உள்ளார். அப்போது அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாடப் பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த நாகை தாசில்தார் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் கவிதாஸ், வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாக்கியராணி ஆகியோர் அங்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட லட்சுமிக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். தீவிபத்துக்கான காரணம் குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.