கூரை வீடு எரிந்து சேதம்
மூங்கில்துறைப்பட்டு அருகே கூரை வீடு எரிந்து சேதம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 52). இவரது கூரை வீடு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் மற்றும் கட்டில், பீரோ. பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.