கோபால்பட்டியில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரம்


கோபால்பட்டியில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரம்
x

கோபால்பட்டியில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு ெதாழில் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் பண்டிகை அன்று விவசாயிகள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்கும திலகமிட்டு வழிபடுவார்கள். மேலும் பொங்கல் வைத்து, மாடுகளுக்கு படைப்பார்கள்.

இதையொட்டி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு அணிவிப்பதற்காக புதிய கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, பிடிகயிறு, சலங்கைகள், சங்குகள், நெற்றிகுஞ்சம், கம்பளி கயிறு உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். அந்த வகையில் கோபால்பட்டியில் கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறுகளை வாங்கினர். இதனால் கயிறு, சலங்கை விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதியது.


Next Story