வடுவூர் ஏரி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி
12 நாட்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி, வடுவூர் ஏரி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடுவூர்:
12 நாட்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி, வடுவூர் ஏரி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி மாயம்
வடுவூர் அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் ஜானகி (வயது70). இவரை கடந்த 4-ந் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் பிணம்
இந்த நிலையில் வடுவூர் ஏரி கரை காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக வடுவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த மூதாட்டி மாயமான ஜானகி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடுவூர் ஏரிக்கரை பகுதியில் விறகு எடுக்க சென்ற ஜானகி மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 12 நாட்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி வடுவூர் ஏரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.