அழுகிய நிலையில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

வேட்டவலம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் யாா் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே நாரையூர் கிராமத்தில் ஆனானந்தல் செல்லும் சாலையில் ஆண் பிணம் கிடந்தது.

இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

அவர் நீல நிற லுங்கியும், வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story