அடிப்படை வசதிகள் செய்திட ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு
பூம்புகார் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்திட ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருவெண்காடு:
பூம்புகார் மேலையூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பூம்புகார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அப்போது, கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி கல்லூரி முதல்வர் அறிவொளி கோரிக்கை மனு அளித்தார். அதன்பேரில், கல்லூரி வளாகத்தில் கழிப்பிட வசதி, சாலை வசதி, கல்லூரி முகப்பு மற்றும் விளையாட்டு மைதானத்தை சுற்றி கம்பிவேலி அமைக்க என மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.