அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை


அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்கின்றனர்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 683-ம், 235 கிராம் தங்கமும், 1 கிலோ 79 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story