ராமேசுவரத்தில் ரூ.1 கோடி நில மோசடி


ராமேசுவரத்தில் ரூ.1 கோடி நில மோசடி
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி நில மோசடி தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

தூத்துக்குடி நாட்டுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் சேவியர் ஜெயபிரகாஷ் (வயது 70). இவருக்கு ராமேசுவரம் சித்திவிநாயகர் கோவில் தெருவில் 8 சென்ட் நிலத்தில் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை ராமேசுவரம் வடக்கு ராமதீர்த்தம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் விஜயகுமார், சரவணக்குமார், முனியசாமி ஆகியோருக்கு வாடகை ஒப்பந்தம் பேசி ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக ரூ.45 ஆயிரம் தரவேண்டும் என்று பத்திரம் பதிவு செய்து கொண்டாராம். இந்த ஒப்பந்தப்படி வாடகை தராமல் இருந்து வந்தார்களாம். இந்நிலையில் ஒப்பந்த தேதி முடிவடைந்த நிலையில் அண்ணன் தம்பிகள் விடுதியை காலி செய்ய மறுத்துவிட்டார்களாம். மேலும், அண்ணன்-தம்பிகள் ஒன்று சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து ஜேம்ஸ் சேவியர் ஜெயபிரகாஷ் எழுதி கொடுத்தது போன்று போலி கிரைய ஒப்பந்த பத்திரம் தயார் செய்து கொண்டார்களாம். இதில், அதேபகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கதிர்வேல், திட்டகுடி சிங்கம் மகன் ராமு ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டார்களாம்.

இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுபற்றி அறிந்த ஜேம்ஸ் சேவியர் ஜெயபிரகாஷ் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் நிலமோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story