குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்


குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்
x

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன்படி, குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடுத்திடும் வகையில் தொழிலாளர் துறையில் திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையரை (அமலாக்கம்) மாவட்ட முதன்மை அதிகாரியாக கொண்டு இயங்கும் மாவட்ட அளவிலான தடுப்பு படையினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்டோன்மெண்ட் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பஞ்சர்கடை, இருசக்கர வாகன பழுது பார்க்கும்கடை, சூப்பர்மார்க்கெட் மற்றும் ஆயில்ஸ்டோர் கடைகளில் பணியில் ஈடுபட்டிருந்த 6 குழந்தை வளரிளம் பருவத்தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த 14-ந் தேதி வழங்கப்பட்ட தீர்பபின் முடிவில் 4 நிறுவன உரிமையாளர்களுக்கும் சேர்த்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தொழில்களில் ஈடுபடுத்தினாலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


Next Story