டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
x

கலசபாக்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை

கலசபாக்கம் அருகே சொரகொளத்தூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வையாளராகவும், 3 பேர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

இன்றுஅதிகாலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக சிவராமகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது.

ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்த்தபோது 16 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பீர் உள்பட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 550 மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து மதுபான பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story